வியாழன், 1 நவம்பர், 2012

How to Add HTML Code : விளம்பரத்தை நம் தளத்தில் எவ்வாறு சேர்ப்பது!


 
     நாம் ஒரு விளம்பரக் கம்பெனியில் (affliate) விளம்பரத்தை பதிவிடுபவராக சேருகிறோம். அவர்களின் (HTML Code) விளம்பரத்தை எவ்வாறு நம்முடைய தளத்தில் சேர்ப்பது என்று பார்ப்போம். இது புது பிளாக் ஆரம்பித்தவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் தவறாக என்ன வேண்டாம்.

     முதலில் உதாரணத்திற்கு http://adf.ly/ தளத்திற்கு சென்று Join Now என்பதில் கிளிக் செய்தோம் என்றால் நம்முடைய பெயர், ஈமெயில், யூசர் நேம், பாஸ்வோர்ட், எந்த மாதிரி கணக்கு என்பதை (Link Shrinker. Creatre Shortened URLs and Earn Money) விபரம் முதலியவற்றைக் கொடுத்து உறுப்பினராக சேர வேண்டும்.


     சேர்ந்த உடன் அக்கௌன்ட் கன்பர்மேஷன் மெயில் உங்கள் மெயில் பாக்சிற்கு வரும். அதில் கொடுத்துள்ள http://adf.ly/confirm.php என்ற லிங்கில் ஆக்டிவேஷன் கீயை காப்பி பண்ணி பேஸ்ட் செய்தால் Your account has been confirmed என்ற செய்தி கிடைக்கும்.




     அடுத்து உங்கள் மெயில் பாக்சிற்கு வெல்கம் மெயில் அனுப்புவார்கள். அதில் விளம்பரக் கம்பெனியின் தளத்தில் லாகின் செய்யச் சொல்வார்கள். லாகின் செய்து அதில்

Shrink!

     என்பதற்கு முன் உள்ள வெள்ளை நிற கட்டத்தில் உங்களுடைய பிளாக்கின் முகவரியைக் கொடுத்து ஸ்ரின்க் என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான ஒரு கோடு வரும்.



        அடுத்து செய்ய வேண்டியது  Home Referrals Tools Account Withdraw Forum Logout என்பதில் டூல்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் பலவிதமான ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு Full Page Script, என்பதை கிளிக் செய்தீர்களேயானால் அதற்கு உண்டான HTML CODE உங்கள் கணக்கு என்னுடன் கிடைக்கும். அந்த வரிகளை காப்பி செய்து உங்களுடைய பிளாக்கில் லேஅவுட் சென்று ஏதோ ஓர் இடத்தில் பேஸ்ட் செய்திடவும். அவ்வளவுதான் தினமும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வருமானம் வரும்.



     விளம்பரத்தை நம்முடைய தளத்தில் சேர்த்து விட்டால் மட்டும் வருமானம் வந்துவிடாது. நல்ல பதிவுகளை நம்முடைய வலைத்தளத்தில் பதிவிடவேண்டும்.

     நம்முடைய மெயிலிற்கு சிலர் உங்கள் கணக்கில் பணம் போட்டாகிவிட்டது. அதைப் பெற்றுக் கொள்ள இந்த லிங்கைக் கிளிக் செய்யுங்கள் என்பார்கள். தயவு செய்து அதைக் கிளிக் செய்து விடாதீர்கள். அவ்வளவுதான். நம்முடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகும். ப்ரௌசர் கிராஸ் ஆகி முடிந்துவிடும். இதற்கு சிசி கிளீனர் கொன்று ரெஜிஸ்ட்ரியைக் கிளீன் செய்ய வேண்டும். இது எனது சொந்த அனுபவம்.

அவர்களுக்கு ஆண்டவன் தண்டனை தருவானா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக