செவ்வாய், 20 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 60 நீர்மேல் எழுத்தாகும்.


60.                        அண்ண லருளா லருளுந்திவ் யாகமம் 
                             விண்ணி லமரர் தமக்கும் விளங்கரிது   
                             எண்ணி லெழுபது கோடிநூறாயிரம்  
                             எண்ணிலும் நீர்மே லெழுத்தது வாகுமே.

     சிவபெருமான் அருளால் அருளப்பட்ட கடவுள் தன்மை உடைய ஆகமங்கள் விண்ணுலகத்தவர்களான தேவர்களுக்கும் அனுபவத்துக்கு வராதவை. அவற்றைக் கணக்கிட்டால் எழுபது கொடியே நூறாயிரம். அங்ஙனம் கணக்கிட்டு அவற்றை அறிந்தாலும் அனுபவம் இல்லையானால் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்தைப் போல் பயன்படாமல் போகும்.



     விளக்கம் :  அண்ணல் - பெருமை. திவ்யாகமம் - தெய்வத்தன்மையுடைய ஆகமம். எழுபது கோடி நூறாயிரம் என்பது கிரந்தங்களின் கணக்கு. ஒற்று எழுத்தை ஒழித்து உயிரும் உயிர் மெய்யுமாய்க் கொள்ளும் முப்பத்திரெண்டெழுத்தின் கூட்டம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக