செவ்வாய், 20 நவம்பர், 2012

ASTROLOGY - 30 : ஜோதிடம் - இராசிகள்.


விருச்சிகம் ராசி 

     இராசி மண்டலத்தில் இது எட்டாவது இராசியாகும். இது காண்பதற்கு தேள் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும்  விருச்சிகம் ராசி  எனும் பெயரிட்டனர்.

     இது 210 பாகை முதல் 240 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 210 கலை 00 விகலை 01 முதல் பாகை 213 கலை 20 வரை விசாகம் நட்சத்திரமும்,   பாகை 213 கலை 20 விகலை 01 முதல் பாகை 226 கலை 40 வரை அனுஷம்  நட்சத்திரமும், பாகை 226 கலை 40 விகலை 01 முதல் பாகை 240 வரை கேட்டை நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் செவ்வாய் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை விருச்சிகம் மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை கார்த்திகை மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.




சோதிடவியலில் இராசி விருச்சிகத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  விருச்சிகம் 

இராசியின் உருவம்                          :  கருந்தேள் 

இராசியின் நிறம்                               :  பசுமை  

இராசியின் அங்கம்                           :  பாலினக்குறி  

இராசியின் வலிமை                         :  பகலில்  

இராசியின் பாலினம்                        :  பெண் 

இராசியின் தன்மை                          :  (1) நிலையானது (ஸ்திரம்) 
                                                              (2) இரட்டைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  செவ்வாய்

இராசியில் உச்சமான கோள்           :  இராகு, கேது 

இராசியில் நீச்சமான கோள்            :  சந்திரன் 

இராசியில் நட்பான கோள்கள்        :  சூரியன், குரு   

இராசியில் பகையான கோள்கள்    :  சனி 

இராசியில் சமமான கோள்கள்       :  புதன், சுக்கிரன்    

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) விசாகம் - நான்காம் பாதம்   
                                                              (2) அனுஷம் - 4 பாதங்கள் 
                                                              (3) கேட்டை - 4 பாதங்கள்   
  
இராசிக்குரிய தேசம்                        :  மலையாளம்
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  SCORPIO - (ஸ்கார்பியோ)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 1/4 

இராசியின் இராசிமானம்                 :  314 வினாடிகள்

இராசியின் காலம்                            :  நிகழ்காலம்    

இராசியின் பார்வை                         :  பகல் செவிடு  

இராசியின் இருப்பிடம்                    :  உள்ளிடம்     

இராசியின் ஸ்தானம்                       :  கிணறு  

இராசியின் திக்கு                              :  மேற்கு 

இராசியின் வேறு பெயர்                  :  1. பறப்பன் 2. தேள் 3. தெருக்கால்
                                
இராசியின் குணம்                            :  சௌம்யம்  

இராசியின் மூலத்திரிகோணம்       :  ------------ 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக