புதன், 21 நவம்பர், 2012

ASTROLOGY - 31 : ஜோதிடம் - இராசிகள்.


தனுர் ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஒன்பதாவது இராசியாகும். இது காண்பதற்கு வில்லைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும்  தனுசு ராசி  எனும் பெயரிட்டனர்.

     இது 240 பாகை முதல் 270 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 240 கலை 00 விகலை 01 முதல் பாகை 253 கலை 20 வரை மூலம் நட்சத்திரமும்,   பாகை 253 கலை 20 விகலை 01 முதல் பாகை 266 கலை 40 வரை பூராடம்   நட்சத்திரமும், பாகை 266 கலை 40 விகலை 01 முதல் பாகை 270 வரை உத்திராடம் நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் குரு ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை தனுர் மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை மார்கழி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.




சோதிடவியலில் இராசி தனுசுவின் தன்மை.

இராசியின் பெயர்                              :  தனுசு 

இராசியின் உருவம்                          :  இடுப்புக்கு கீழ் குதிரை, இடுப்புக்கு மேல்  
                                                              வில் பிடித்த மனிதன்

இராசியின் நிறம்                               :  சிவப்பு 

இராசியின் அங்கம்                           :  துடை   

இராசியின் வலிமை                         :  இரவில்   

இராசியின் பாலினம்                        :  ஆண் 

இராசியின் தன்மை                          :  (1) இரண்டும் (உபயம்) 
                                                              (2) ஒற்றைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  குரு 

இராசியில் உச்சமான கோள்           :  -------

இராசியில் நீச்சமான கோள்            :  -------

இராசியில் நட்பான கோள்கள்        :  சூரியன், செவ்வாய், சுக்கிரன், 
                                                              இராகு, கேது    

இராசியில் பகையான கோள்கள்    :  --------

இராசியில் சமமான கோள்கள்       :  சந்திரன், புதன், சனி     

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) மூலம் 4 பாதங்கள்  
                                                              (2) பூராடம் - 4 பாதங்கள் 
                                                              (3) உத்திராடம் - முதல் பாதம்   
  
இராசிக்குரிய தேசம்                        :  சிந்துதேசம் 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  SAGITTARIUS - (ஸாகிடேரியஸ்)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 1/2

இராசியின் இராசிமானம்                 :  329 வினாடிகள்

இராசியின் காலம்                            :  எதிர்காலம்    

இராசியின் பார்வை                         :  இராச்செவிடு  

இராசியின் இருப்பிடம்                    :  இடை      

இராசியின் ஸ்தானம்                       :  போர்க்களம் மற்றும் எல்லைக்கப்பால்  
                                                              தோட்டம்   

இராசியின் திக்கு                              :  மேற்கு 

இராசியின் வேறு பெயர்                  :  1. காண்டீபம் 2. கொடுமரம் 3. துரோணம்  
                                                              4. சாபம் 5. வில் 6. சிலை 
                                
இராசியின் குணம்                            :  குரூரம்  

இராசியின் மூலத்திரிகோணம்       :  பத்தாவது பாகையில் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக