வெள்ளி, 16 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 54 உபநிடதம் கூறும் நெறி.


54.                        திருநெறி ஆவது, சித்து அசித்து அன்றிப்  
                             பெருநெறி ஆய பிரானை நினைந்து 
                             குருநெறியாம் சிவ மரம்நெறி கூடும்    
                             ஒருநெறி; ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

     கடவுள் நெறி என்று சிறப்பித்துக் கூறப்படுவது அறிவு அறியாமை அற்ற வீடுபேறாய் உள்ள இறைவனை எண்ணிக் குருவினால் உணர்த்தப்படும் நெறியாய்ச் சிவத்தைப் பொருந்துகின்ற ஒப்பில்லாத நெறியாகும். இத்தகைய நெறியையே சிறப்பான வேத முடிவான உபநிடதம் விளக்கும்.



     விளக்கம் :  குருநெறி - சன்மார்க்க நெறி. ஒருநெறி -ஒப்பில்லாத நெறி. வேதாந்தம் - வேதம் + அந்தம்; வேதாந்தம் - வேதத்தின் முடிவு. குருவின் அருளால் சிவனடியைச் சேர்ப்பிக்கும் நெறியை உபநிடதம் கூறுகின்றது என்க. திருநெறி - தெய்வீக நெறி.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக