சனி, 24 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 65 ஊழிக்காலத்தில் அருளினான்.


65.                        மாரியும் கோடையும் வார்பனி தூங்க, நின்று 
                             ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து 
                             ஆரியமும் தமிழும் உடனே சொலிக் 
                             காரிகை யார்க்குக் கருணை செய்தானே.

     மழைக்காலம் கோடைக்காலம் ஆகியவை இலயப்பட்டு நின்று எரியும் வறட்சி அடைந்த ஊழிக்காலத்து வடமொழியையும் தமிழ் மொழியையும் ஒரே காலத்தில் உபதேசித்துப் படைப்புத் தொடங்குவதற்கு முன்பு சிவபெருமான் பராசக்திக்கு அருளினான்.




     விளக்கம் :  சிவபெருமான் ஆகமப் பொருளை ஊழிக்காலத்தில் பராசக்திக்கு அருள் செய்தான். அதை வடமொழி தமிழ்மொழி என்னும் இரண்டிலும் அருள் செய்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக