ஞாயிறு, 4 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 45 பகலவன் ஆவான்!



45.                        விதிவழி அல்லதுஇல் வேலை உலகம்;
                             விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை;
                             துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்  
                             பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

     கடலால் சூழப்பட்ட உலகம் இறைவன் விதித்த முறையில் நடப்பதன்றி வேறு முறையால் நடப்பதன்று. இவ்விதி முறைக்கு நாம் அடையும் இன்பம் மாறுபாடு கொண்டதன்று. பேரொளி வடிவினனான இறைவனும் நாள்தோறும் துதி வழியாய் வீட்டு நெறியை அருளும் பகலவன் ஆவான். 





     விளக்கம் : விதி - இறைவன் விதித்த முறை. வேலை உலகம் - கடலால் சூழப்பட்ட உலகம். விருத்தம் - மாறுபட்டது. பதி வழி காட்டும் - வீட்டு நெறியை அளிக்கும். துதிவழி - வழிபடும் முறை.

2 கருத்துகள்:

  1. முன்னாடி எல்லாம் கடலை பார்த்தாலே எனக்கு சந்தோசமாய் இருக்கும்...ஆனால் எப்போ சுனாமி வந்துச்சோ அதுக்கு பிறகு கடலை பார்த்தாலே பயம் தான்.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    பதிலளிநீக்கு