ஞாயிறு, 18 நவம்பர், 2012

ASTROLOGY - 28 : ஜோதிடம் - இராசிகள்.


கன்னி ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஆறாவது இராசியாகும். இது காண்பதற்கு குடத்தைச் சுமந்து நிற்கும் ஒரு பெண்ணைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் கன்னி ராசி எனும் பெயரிட்டனர்.

     இது 150 பாகை முதல் 180 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 150 கலை 00 விகலை 01 முதல் பாகை 160 வரை உத்திரம் நட்சத்திரமும்,   பாகை 160 கலை 00 விகலை 01 முதல் பாகை 173 கலை 20 வரை ஹஸ்தம் நட்சத்திரமும், பாகை 173 கலை 20 விகலை 01 முதல் பாகை 180 வரை சித்திரை நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் புதன் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை கன்யாமாஸம் என்பர். தமிழில் இம்மாதத்தை புரட்டாசி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.






சோதிடவியலில் இராசி கன்னியின் தன்மை.

இராசியின் பெயர்                              :  கன்னி   

இராசியின் உருவம்                          :  கதிர்குலையும், அக்னியும் கொண்ட   
                                                              பெண்  

இராசியின் நிறம்                               :  கருமை 

இராசியின் அங்கம்                           :  இடுப்பு 

இராசியின் வலிமை                         :  பகலில்  

இராசியின் பாலினம்                        :  பெண் 

இராசியின் தன்மை                          :  (1) இரண்டும் (உபயம்) 
                                                              (2) இரட்டைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  புதன் 

இராசியில் உச்சமான கோள்           :  புதன் 

இராசியில் நீச்சமான கோள்            :  சுக்கிரன் 

இராசியில் நட்பான கோள்கள்        :  சந்திரன், குரு, சனி, இராகு, கேது 

இராசியில் பகையான கோள்கள்    :  செவ்வாய்     

இராசியில் சமமான கோள்கள்       :  சூரியன்   

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) உத்திரம் - 1, 2, 3 பாதங்கள்  
                                                              (2) ஹஸ்தம் - 4 பாதங்கள் 
                                                              (3) சித்திரை - 1, 2 பாதங்கள்   
  
இராசிக்குரிய தேசம்                        :  கேரளம் 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  VIRGO - (விர்கோ)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 

இராசியின் இராசிமானம்                 :  297 வினாடிகள்

இராசியின் காலம்                            :  எதிர்காலம்    

இராசியின் பார்வை                         :  இராக்குருடு 

இராசியின் இருப்பிடம்                    :  இடை    

இராசியின் ஸ்தானம்                       :  நகரம்  

இராசியின் திக்கு                              :  தெற்கு 

இராசியின் வேறு பெயர்                  :  1. பெண் 2. மாதை 
  
இராசியின் குணம்                            :  சௌம்யம்

இராசியின் மூலத்திரிகோணம்       :  ஐந்தாவது பாகையில்  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக