சனி, 24 நவம்பர், 2012

ASTROLOGY - 33 : ஜோதிடம் - இராசிகள்.


கும்ப ராசி 

     இராசி மண்டலத்தில் இது பதினொன்றாவது இராசியாகும். இது காண்பதற்கு குடத்துடன் கூடிய மனிதனைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் கும்ப ராசி எனும் பெயரிட்டனர்.

     இது 300 பாகை முதல் 330 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 300 கலை 00 விகலை 01 முதல் பாகை 306 கலை 40 வரை அவிட்டம் நட்சத்திரமும்,   பாகை 306 கலை 40 விகலை 01 முதல் பாகை 320 வரை சதயம் நட்சத்திரமும், பாகை 320 கலை 00 விகலை 01 முதல் பாகை 330 வரை பூரட்டாதி நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் சனி ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை கும்ப மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை மாசி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.





சோதிடவியலில் இராசி கும்பத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  கும்பம் 

இராசியின் உருவம்                          :  குடத்துடன் கூடிய புருஷன்  

இராசியின் நிறம்                               :  பசுமை 

இராசியின் அங்கம்                           :  கணுக்கால்  

இராசியின் வலிமை                         :  பகலில் 

இராசியின் பாலினம்                        :  ஆண் 

இராசியின் தன்மை                          :  (1) நிலையானது (ஸ்திரம்) 
                                                              (2) ஒற்றைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  சனி 

இராசியில் உச்சமான கோள்           :  --------

இராசியில் நீச்சமான கோள்            :  --------

இராசியில் நட்பான கோள்கள்        :  சுக்கிரன்    

இராசியில் பகையான கோள்கள்    :  சூரியன், இராகு, கேது 

இராசியில் சமமான கோள்கள்       :  சந்திரன், செவ்வாய், புதன், குரு      

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) அவிட்டம் - 1, 2 பாதங்கள்  
                                                              (2) சதயம் - 4 பாதங்கள் 
                                                              (3) பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்     
  
இராசிக்குரிய தேசம்                        :  யவனம் 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  AQUARIUS - (அக்வாரியஸ்)

இராசியின் (லக்ன) நாழிகை            :  4 3/4

இராசியின் இராசிமானம்                 :  284 வினாடிகள்

இராசியின் காலம்                            :  நிகழ்காலம்    

இராசியின் பார்வை                         :  பகலில் முடம்   

இராசியின் இருப்பிடம்                    :  உள்ளிடம்  

இராசியின் ஸ்தானம்                       :  ஜலம் 

இராசியின் திக்கு                              :  வடக்கு  

இராசியின் வேறு பெயர்                  :  1. குடம் 2. சால் 3. சாடி
                                
இராசியின் குணம்                            :  குரூரம் 

இராசியின் மூலத்திரிகோணம்       :  நான்காவது பாகையில் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக