சனி, 17 நவம்பர், 2012

ASTROLOGY - 27 : ஜோதிடம் - இராசிகள்.


சிம்ம ராசி

     இராசி மண்டலத்தில் இது ஐந்தாவது இராசியாகும். இது காண்பதற்கு சிங்கம் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் சிம்ம ராசி  எனும் பெயரிட்டனர்.

     இது 120 பாகை முதல் 150 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 120 கலை 00 விகலை 01 முதல் பாகை 133 கலை 20 வரை மகம் நட்சத்திரமும்,   பாகை 133 கலை 20 விகலை 01 முதல் பாகை 146 கலை 40 வரை பூரம் நட்சத்திரமும், பாகை 146 கலை 40 விகலை 01 முதல் பாகை 150 வரை உத்திரம் நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் சூரியன் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை சிம்ம மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை ஆவணி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.





சோதிடவியலில் இராசி சிம்மத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  சிம்மம்  

இராசியின் உருவம்                          :  சிங்கம்  

இராசியின் நிறம்                               :  சிவப்பு 

இராசியின் அங்கம்                           :  வயிறு 

இராசியின் வலிமை                         :  பகலில்  

இராசியின் பாலினம்                        :  ஆண் 

இராசியின் தன்மை                          :  (1) நிலையானது (ஸ்திரம்) 
                                                              (2) ஒற்றைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  சூரியன் 

இராசியில் உச்சமான கோள்           :  இல்லை (தூமன்)

இராசியில் நீச்சமான கோள்            :  இல்லை (தூமகேது)

இராசியில் நட்பான கோள்கள்        :  சந்திரன், செவ்வாய், புதன், குரு 

இராசியில் பகையான கோள்கள்    :  சுக்கிரன், சனி, இராகு, கேது    

இராசியில் சமமான கோள்கள்       :  -------

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) மகம் - 4 பாதங்கள்  
                                                              (2) பூரம் - 4 பாதங்கள் 
                                                              (3) உத்திரம் - முதல் பாதம்   
  
இராசிக்குரிய தேசம்                        :  பாண்டிய நாடு 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  LEO - (லியோ)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 1/4

இராசியின் இராசிமானம்                 :  314 வினாடிகள்

இராசியின் காலம்                            :  நிகழ் காலம்    

இராசியின் பார்வை                         :  பகல் குருடு 

இராசியின் இருப்பிடம்                    :  உள்ளிடம்    

இராசியின் ஸ்தானம்                       :  மலை சார்பு 

இராசியின் திக்கு                              :  தெற்கு 

இராசியின் வேறு பெயர்                  :  1. அரி 2. ஆளி 3. அரிமா   4. புலி 
  
இராசியின் குணம்                            :  குரூரம் 

இராசியின் மூலத்திரிகோணம்       :  இருபதாவது பாகையில்  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக