புதன், 21 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 61 அறிவாய் விளங்குபவன்.


61.                        பரனாய்ப் பராபரம் காட்டி உலகில் 
                             தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து     
                             அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி 
                             உரன்ஆகி ஆகமம் ஓங்கிநின் றானே.

     மிக மேன்மையானவனாய்ப் பரஞானம் அபரஞானம் என்ற இரண்டையும் அறிவித்து உலகத்தைத் தாங்குபவனாய், சிவபுண்ணியதைத் தான் அருள் செய்யும் போது அரணாய்த் தேவர் வணங்கி வழிபடும் சிவபெருமான் ஆகமத்திலே அறிவாய் விளங்குகின்றான்.  



     விளக்கம் :  பரனாய் - மேலானவனாய். பராபரம் - பரஞானம் அபரஞானம். சிவதன்மம் - சிவபுண்ணியம். தரன் - பரிபாலிப்பவன். உரன் - திண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக