திங்கள், 19 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 59 சிவபெருமான் வெளிப்படுத்தியவை அறத்தை உரைப்பன.


59.                        பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும் 
                             கண்டவர் கூறும் கருத்தறி வாரென்க    
                             பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் 
                             அண்ட முதலா நரஞ்சொன்ன வாறே.

     அறிஞர் என்பவர் பதினெட்டு மொழிகளும் அறிந்தவர். அத்தகையவர் ஆகமம் கூறும் பொருளை நன்றாய் உணர்ந்தவர். அறிஞர் அறிந்த பதினெட்டு மொழிகளும் அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமான் வெளிப்படுத்திய அறத்தைக் கூறுவனவாகும்.



     விளக்கம் :  பண்டிதர் - அறிஞர்; புலவர். பாடை - மொழி. அண்டமுதலான் - அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமான்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக