ஞாயிறு, 18 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 56 புறத்தே போய் அழிவர்!


56.                        பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் 
                             ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் 
                             வேட்டு விருப்பார், விரதம் இல்லாதவர்  
                             ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.

     பாடல்களும் அவற்றுக்குரிய இசையும் பரந்து ஆடும் ஆட்ட மகளிரின் ஆட்டமும் நீங்கப் பெறாத உலகத்தில் வேத நெறியைக் காட்டும் உண்மை நெறி நில்லாதவர் வேள்வியைச் செய்யும் விருப்புக் கொண்டவராய் விரதம் இல்லாதவர் ஆவர். அவர்கள் புறத்தே போய் மாறுபாட்டை அடைந்து அழிகின்றனர். 


     விளக்கம் :  பரக்கும் - அலைந்து திரியும். ஆட்டு - நடனம். வேட்டு விருப்பார் - வேள்வி இயற்றும் விருப்பம் உடையவர். இகலுதல் - மாறுபடுதல். ஈட்டும் இடம் - பயன் அனுபவிக்கும் இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக