புதன், 14 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 52 வேதத்தை உரைத்த காரணம்!


52.                        வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் 
                             வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட 
                             வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் 
                             வேதம் உரைத்தானும் மெய்பொருள் காட்டவே.

     வேதத்தை எடுத்தும் படுத்தும் ஒசையளவில் ஓதுபவன் அவற்றை அறிந்தவன் ஆகமாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் பிரமப் பொருள் விளங்கவும் அந்தணர் வேள்வி செய்தற் பொருட்டும் உண்மைப் பொருளை உணர்த்தவும் வேதத்தை உரைத்தருளினான்.



     விளக்கம் :  வேதா - பிரமப் பொருள். வேதியர் வேள்விக்காய் - அந்தணர் யோகம் செய்தற் பொருட்டு வேதத்தின் உண்மைப் பொருளை உணராமல் ஓதுபவர் வேதியர் ஆகார். வேதம் - தமிழ் மறை என்பர் அறிஞர்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக