ஞாயிறு, 11 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 48 அணையா விளக்கைப் பொருந்தியிருந்தேன்!


48.                        அடியார் பரவும் அமரர் பிரானை 
                             முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் 
                             படியார் அருளும் பரம்பரன் எந்தை 
                             விடியா விளக்குஎன்று மேவி நின்றேனே.

     அடியவர் வணங்கும் தேவரின் தலைவனான சிவபெருமானை என் தலையால் வணங்கி அவனை நினைந்து உலகத்தவர்க்கு அருளும் மேலானவனான எம் தலைவனை அணையாத விளக்கு என்று நினைத்துப் போருந்தியிருந்தேன்.



     விளக்கம் :  அமரர் - தேவர். முன்னி - நினைந்து. விடியா விளக்கு - அணையாத விளக்கு; அது இரவு பகல் என்ற வேறுபாடின்றி எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருப்பது. படி - உலகம்.  

1 கருத்து:

  1. படங்கள் அனைத்தும் மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு