செவ்வாய், 13 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 49 முத்தியை அடையலாம்!


49.                        நரை பசு பாசத்து நாதனை உள்ளி,
                             உரைபசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத் 
                             திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் 
                             கரைபசு பாசம் கடந்து எய்த லாமே.

     பழமையுடைய சீவன் பாசம் ஆகியவற்றுக்குத் தலைவனான சிவபெறுமா னை நினைந்து பசு எனவும் பாசம் எனவும் சொல்லப்படுவனவற்றின் இயல்பை அறிந்து சிவனோடு ஒன்றாய்க் கூட வல்லார், அலை போல் வரும் பசுக்கள் செய்யும் பாவமான கடலை நீந்திப் பசுபாசங்களைப் கடந்து முத்திக் கரையை அடையலாம்.



     விளக்கம் :  பசு - உயிர்; சீவன். பாசம் - தளை. சீவனாகிய பசுபாசமாகிய தளையால் கட்டப் பெற்றுத் துன்புறுவது என்று அறிந்து இறைவனான பதியுடன் ஓன்று கூடிட வல்லார் என்று கொள்க. 'நரைபசு' என்பதற்குப் பதிலாகப் 'பரைபசு' என்பதும் பாடம் உண்டு. பறை - மனோன்மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக