சனி, 17 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 55 சிவனை உணர்வார் இலர்!


55.                        ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக் 
                             கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
                             வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் 
                             பேரு அங்கம் ஆகப் பெருக்குகின் றாரே.

     ஆறு அங்கங்களாய் விளங்கும் வேதத்தை அருளிச் செய்தவன் இறைவன். அவ்விறைவனை உடலின் பகுதியாய்க் கொண்டு அவனது இயல்பை உணர்பவர் இலர். அவனைத் தம்மின் வேறு அங்கமாக எண்ணி வழிபட்டுப் பின் தம் விருப்பங்களைப் பெருக்கிக் கெட்டுப் போகின்றார்களே!



     விளக்கம் :  ஆறு அங்கம் - ஆறு உறுப்புகள்; அவை 1. சிட்சை, 2. கற்பகம், 3. வியாகரணம், 4. சந்தோவிசிதி, 5. சோதிடம், 6. நிருத்தம். கூறங்கமாக - மாது ஒரு பாகனாக. குணம் - இறைவனின் பேரருட்குனம். 
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக