ஞாயிறு, 11 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 46 வணங்குபவர் மனத்தகத்தான்!


46.                        'அந்திவண்ணா, அரனே, சிவனே' என்று  
                             சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
                             முந்திவண்ணா, முதல்வா, பரனே' என்று  
                             புந்தி வண்ணன் எம் மனம் புகுந்தானே.

     சிவபெருமானையே சிந்தனையில் எண்ணிக் கொண்டிருக்கும் இயல்புடைய மனம் திருந்திய அடியார், 'செம்மேனியுடையவனே, எப்பொருளுக்கும் இறைவனே, மங்கல வடிவினனே, என்று வணங்க' 'பழைமையானவனே, முதல்வனே, மேலானவனே!' என்று நான் வணங்க, ஞான வடிவினனாய் எம் மனத்தில் எழுந்தருளி இருந்தான். 
   


     விளக்கம் :  அந்தி வண்ணா - சிவந்த அந்திப் பொழுது போன்ற மேனியனே! அரனே - எப்பொருளுக்கும் இறைவனே. அந்திவண்ணன், அரன், சிவம் என்பன உருவம். முந்திவண்ணன், முதல்வன், பரன் ஆகியவை அருவம். முந்திவண்ணன் - படைப்புக்கு விருப்புக் கொண்ட காலத்தில் முதல் முதல் வெளிப்பட்ட ஐந்து நிறக் கதிர்களை உடையவன்! பரன் - யாவர்க்கும் மேலானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக