செவ்வாய், 13 நவம்பர், 2012

ASTROLOGY - 23 : ஜோதிடம் - இராசிகள்.


இராசிகள் :

     சோதிடவியலில் கோள்கள், நாள்களுக்கு அடுத்தாற்போல் முக்கியத்துவம் வாய்ந்தவை இராசிகளாகும். வானமண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. இதனை 12 இராசிகளாகப் பிரிக்க ஒவ்வொரு இராசியும் 30 பாகைகள் கொண்டதாக ஆகிறது. 

     இந்த பன்னிரண்டு இராசிகளின் பெயர் பின்வருமாறு : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகும். அவைகளின் அமைப்பை பின்வருமாறு காணலாம்.


கட்டமாக பின்வருமாறு இதை எழுதும் வழக்கமும் உண்டு.



     இந்த இராசிகளின் தன்மைகளைப் பற்றித் தனித்தனியாகக் காண்போம்.

மேஷ ராசி :

     இராசி மண்டலத்தில் இது முதல் இராசியாகக் கருதப்படுகிறது. இது காண்பதற்கு ஆடு போன்ற தோற்றமளிப்பதால் இது ஆடு எனும் பொருள் தரும் 'மேஷம்' எனும் பெயர் பெற்றது. 

     இது பூஜ்யம் பாகை முதல் முப்பது பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 13 கலை 20 வரை அசுவதி நட்சத்திரமும், பாகை 13 கலை 20 - விகலை 01 முதல் பாகை 26 கலை 40 வரை பரணி நட்சத்திரமும், பாகை 26 கலை 40 விகலை 01 முதல் பாகை 30 வரை கார்த்திகை நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் செவ்வாய் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை மேஷமாஸம் என்பர். தமிழில் இம்மாதத்தை சித்திரை மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம். 


சோதிடவியலில் இராசி மேஷத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  (மேஷம்) மேடம் 

இராசியின் உருவம்                          :  ஆடு 

இராசியின் நிறம்                               :  சிவப்பு 

இராசியின் அங்கம்                           :  தலை 

இராசியின் வலிமை                         :  இரவில் 

இராசியின் பாலினம்                        :  ஆண் 

இராசியின் தன்மை                          :  (1) செல்வது (சரம்) 
                                                              (2) ஒற்றைப்படை

இராசிக்குரிய கோள்                         :  செவ்வாய் 

இராசியில் உச்சமான கோள்           :  சூரியன் 

இராசியில் நீச்சமான கோள்            :  சனி 

இராசியில் நட்பான கோள்கள்        :  குரு  

இராசியில் பகையான கோள்கள்    :  இராகு, கேது  

இராசியில் சமமான கோள்கள்       :  சந்திரன், புதன், சுக்கிரன்  

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) அசுவதி - 4 பாதங்கள்  
                                                              (2) பரணி - 4 பாதங்கள் 
                                                              (3) கார்த்திகை முதல் பாதம் 
  
இராசிக்குரிய தேசம்                        :  பாடலம்
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  ARIES - (ஏரியஸ்)

இராசியின் (லக்ன) நாழிகை            :  4 1/4

இராசியின் இராசிமானம்                 :  259 வினாடிகள்

இராசியின் பார்வை                         :  பகல் குருடு 

இராசியின் இருப்பிடம்                    :  வெளியிடம் 

இராசியின் ஸ்தானம்                       :  காடு 

இராசியின் திக்கு                              :  கிழக்கு

இராசியின் வேறு பெயர்                  :  1. வருடை 2. மை 3. ஆடு 
                                                              4. தகர் 5. மறி 6. கொச்சை 7.கொண்டல் 
    
இராசியின் காலம்                            :  இறந்தகாலம் 
  
இராசியின் குணம்                            :  குரூரம் 

செவ்வாயின் மூலத்திரிகோணம்   :  பன்னிரண்டாவது பாகையில்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக