திங்கள், 19 நவம்பர், 2012

ASTROLOGY - 29 : ஜோதிடம் - இராசிகள்.


துலா ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஏழாவது இராசியாகும். இது காண்பதற்கு தராசைக்கையில் கொண்டுள்ள ஒரு மனிதனைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் துலா ராசி எனும் பெயரிட்டனர்.

     இது 180 பாகை முதல் 210 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 180 கலை 00 விகலை 01 முதல் பாகை 186 கலை 40 வரை சித்திரை நட்சத்திரமும்,   பாகை 186 கலை 40 விகலை 01 முதல் பாகை 200 வரை சுவாதி நட்சத்திரமும், பாகை 200 கலை 00 விகலை 01 முதல் பாகை 210 வரை விசாகம் நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் சுக்கிரன் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை துலா மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை ஐப்பசி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.





சோதிடவியலில் இராசி துலாமின்  தன்மை.

இராசியின் பெயர்                              :  துலாம்  

இராசியின் உருவம்                          :  தராசு கொண்ட ஆண் 

இராசியின் நிறம்                               :  வெண்மை 

இராசியின் அங்கம்                           :  தொப்புளுக்குக்கீழ் 

இராசியின் வலிமை                         :  பகலில்  

இராசியின் பாலினம்                        :  ஆண் 

இராசியின் தன்மை                          :  (1) செல்வது (சரம்) 
                                                              (2) ஒற்றைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  சுக்கிரன் 

இராசியில் உச்சமான கோள்           :  சனி 

இராசியில் நீச்சமான கோள்            :  சூரியன்  

இராசியில் நட்பான கோள்கள்        :  புதன், இராகு, கேது 

இராசியில் பகையான கோள்கள்    :  குரு      

இராசியில் சமமான கோள்கள்       :  சந்திரன், செவ்வாய்   

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) சித்திரை - 3,4 பாதங்கள்  
                                                              (2) சுவாதி - 4 பாதங்கள் 
                                                              (3) விசாகம் - 1, 2, 3 பாதங்கள்   
  
இராசிக்குரிய தேசம்                        :  கொல்லம்  
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  LIBRA - (லிப்ரா)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 

இராசியின் இராசிமானம்                 :  297 வினாடிகள்

இராசியின் காலம்                            :  இறந்தகாலம்    

இராசியின் பார்வை                         :  பகல் செவிடு  

இராசியின் இருப்பிடம்                    :  வெளியிடம்     

இராசியின் ஸ்தானம்                       :  ஆற்றோரம், கடை வீதி 

இராசியின் திக்கு                              :  மேற்கு 

இராசியின் வேறு பெயர்                  :  1. நிறைகோல் 2. துலாகோல் 3. துலை 
                                                              4. கோல் 5. தராசு  
  
இராசியின் குணம்                            :  குரூரம்  

இராசியின் மூலத்திரிகோணம்       :  ஐந்தாவது பாகையில்  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக