வெள்ளி, 23 நவம்பர், 2012

I will go to Prison : நான் ஜெயிலுக்குப போறேன்!


       மனைவியின் நச்சரிப்பு தாங்காமல், சிறைக்கு செல்ல முயன்று, ஓட்டல் உரிமையாளர் ஒருவர், கொள்ளையடிப்பு நாடகத்தை நடத்தியுள்ளார். தைவான் நாட்டை சேர்ந்தவர் பய், 36. இவரது மனைவி, தினமும் இவரை திட்டிக்கொண்டே இருந்ததால், மனம் வெறுத்து போன பய், சிறைக்கு சென்று நிம்மதியாக இருக்க திட்டமிட்டார்.

     இதற்காக, வீட்டருகே உள்ள பலசரக்கு கடைக்கு சென்று, 'நான் கொள்ளையடிக்க போகிறேன். போலீசுக்கு தகவல் கொடுங்கள்' என, கூவினார். சொன்னபடி, அங்குள்ள சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து கொண்டு, கடைக்கு வெளியே வந்து போலீசுக்காக காத்திருந்தார்.



     போலீசார் வந்து பய்யை கைது செய்தனர். விசாரித்ததில், உண்மையில் இவருக்கு கொள்ளையடிக்கும் நோக்கமில்லை. மனைவியின் தொந்தரவை பொறுக்க முடியாமல்தான், இந்த வேலையை செய்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டு, வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக