THIRUMANTIRAM - 63 ஒன்பது ஆகமங்களின் பெயர்கள்.
63. பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீர முயர்சிந்திய வாதுளம்
மற்றவ்வி யாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.
குரு பரம்பரையில் பெற்ற ஆகமங்கள் ஒன்பதும் வருமாறு. 1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6. யாமளம், 7. காலோத்தரம், 8. சுப்பிரம், 9. மகுடம்.
விளக்கம் : ஆகமங்கள் இருபத்தெட்டுள் முக்கியமானவை ஒன்பதாம். அவ்வொன்பதன் சாரமே திருமந்திரம். மேற்சொல்லப்பட்டவை நந்தியம் பெருமான் உரைத்தவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக