சனி, 20 ஜூலை, 2013

THIRUMANTIRAM - 81 : தமிழ் செய்யுமாறு என்னைப் படைத்தான்!


81.                        பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?         
                             முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்;  
                             என்னை நன்றாக இறைவன் படைத்தனன்  
                             தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.  

     பின்னால் தயங்கி நின்று ஏன் பிறவியைப் பெறுகின்றனர்? அவர்கள் முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவத்தைச் செய்யாதவர்கள் ஆவார்கள். எனவே, நான் நல்ல தவம் செய்திருந்தமையால் தன்னைப் பற்றித் தமிழில் நூல் செய்யும் வண்ணம் எனக்கு ஞானத்தை அளித்துச் சிவபெருமான் பிறவியைத் தந்தருளினான்.



     விளக்கம் : பின்னை - பின்பு; அடுத்த பிறவி. தமிழில் ஆகமம் செய்யுமாறு என்னைச் சிவபெருமான் படைத்தான் என்கிறார் திருமூலர். தமிழ் - திருமந்திர நூல். திருமூலர் தோன்றுதற்கு முன்னமே தமிழ் சிறந்திருந்தது. ஆயினும் ஆகம நூல் இல்லை. அது வட மொழியில் இருந்தது. அதனால் ஆகம சாரத்தைத் தமிழில் செய்தார் திருமூலர். 

2 கருத்துகள்:

  1. ... ஆயினும் ஆகம நூல் இல்லை. அது வட மொழியில் இருந்தது. அதனால் ஆகம சாரத்தைத் தமிழில் செய்தார் திருமூலர். திருமூலர் காலத்தில் வடமொழியே இல்லையே ... இதற்கு இப்படி ஒரு கொடும்பாவி விளக்கமா ? தமிழர்கள் உருப்பட்டமாதிரிதான் .

    பதிலளிநீக்கு
  2. மிகச்சரி. வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் இறைவன் சமக்கிருதத்தை விரும்பவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!

    பதிலளிநீக்கு