7. சோதிடவியலில் ஆசுவயுஜ மாதத்தின் தன்மை :
1. ஆசுவயுஜ மாத தேவதையின் நிறம் : சிவப்பு
2. ஆசுவயுஜ மாத தேவதையின் பெயர் : இஷன்
3. ஆசுவயுஜ மாத தேவதையின் வாகனம் : சிறந்த கரடி
5. ஆசுவயுஜ மாத தேவதையின் தலைகள் : ஆறு முகங்கள்
6. ஆசுவயுஜ மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : அறிவாளி, செல்வந்தன், அரசர்களுக்கு பிரியமானவன், நற்செயல்கள் புரிபவன், நிறைய வேலைக்காரர்கள் உடையவன், கொடைவள்ளல், நற்குணம் மிக்கவன், அநேக பிள்ளைகளை உடையவன், குதிரை முதலியவற்றுடன் கூடியவன்.
8. சோதிடவியலில் கார்த்திக மாதத்தின் தன்மை :
1. கார்த்திக மாத தேவதையின் நிறம் : வெண்மை
2. கார்த்திக மாத தேவதையின் பெயர் : ஊர்ஜன்
3. கார்த்திக மாத தேவதையின் கண்கள் : மூன்று கண்கள்
4. கார்த்திக மாத தேவதையின் தலைகள் : அழகான சடைகள்
5. கார்த்திக மாத தேவதையின் இருப்பிடம் : கைலாச மலையுச்சியில் உள்ள ஏரி
6. கார்த்திக மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : நற்செயல்கள் புரிபவன், பல விஷயங்களைப் பலவிதமாக பேசும் திறமையுள்ளவன், செல்வந்தன், மிகுந்த காமம் உடையவன், விற்பனையில் சிறந்தவன்.
9. சோதிடவியலில் மார்கசீர்ஷ மாதத்தின் தன்மை :
1. மார்கசீர்ஷ மாத தேவதையின் நிறம் : வெண்மை
2. மார்கசீர்ஷ மாத தேவதையின் பெயர் : ஸஹன்
3. மார்கசீர்ஷ மாத தேவதையின் ஆயுதம் : சூலம்
4. மார்கசீர்ஷ மாத தேவதையின் வாகனம் : காளை
5. மார்கசீர்ஷ மாத தேவதையின் இருப்பிடம் : பெண்களால்
சூழப்பட்டிருப்பவர்
6. மார்கசீர்ஷ மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : தீர்த்த யாத்திரை செல்பவன், நற்குணம் மிக்கவன், கலைகளில் சிறந்தவன், ஆடை ஆபரணங்களுடனும், அழகுடனும் இருப்பவன், பிறருக்கு உதவுபவன், செல்வந்தன்.
10. சோதிடவியலில் புஷ்ய மாதத்தின் தன்மை :
1. புஷ்ய மாத தேவதையின் நிறம் : பச்சை
2. புஷ்ய மாத தேவதையின் பெயர் : ஸஹஸ்யன்
3. புஷ்ய மாத தேவதையின் ஆயுதம் : கத்தி, கேடயம்
4. புஷ்ய மாத தேவதையின் வாகனம் : நானக்தாம்புள்
5. புஷ்ய மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : பிறருக்கு உபகாரி, முன்னோர் சொத்தை இழப்பவன், தான் ஈட்டிய பொருளையும் செலவு செய்பவன், சாத்திரங்களும், கலைகளும் கற்றவன்.
11. சோதிடவியலில் மாக மாதத்தின் தன்மை :
1. மாக மாத தேவதையின் நிறம் : பச்சை
2. மாக மாத தேவதையின் பெயர் : தபஸ்
3. மாக மாத தேவதையின் ஆயுதம் : கத்தி
4. மாக மாத தேவதையின் வாகனம் : சிறந்த கிளி
5. மாக மாத தேவதையின் கைகள் : கத்தியுடன் கூடியன
6. மாக மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : மந்திரங்கள் அறிந்தவன், வைதீகத்தில் ஈடுபாடு உள்ளவன், யோகாப்பியாசம் செய்பவன், பகைவர்களை வெல்பவன், மேன்மையானவன்.
12. சோதிடவியலில் பால்குன மாதத்தின் தன்மை :
1. பால்குன மாத தேவதையின் நிறம் : பாடலவர்ணம்
2. பால்குன மாத தேவதையின் பெயர் : தபஸியன்
3. பால்குன மாத தேவதையின் வாகனம் : அழகிய குயில்
4. பால்குன மாத தேவதையின் கைகள் : பூணல் அணிந்த தோள்
5. பால்குன மாத தேவதையின் தலைகள் : கிரீடமணிந்த தலை
6. பால்குன மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : பிறருக்கு உதவுபவன், சாமார்த்தியசாலி, தயை உள்ளவன், அழகன், பெண்களின் மனது அறிந்து நடப்பவன், வீண் பேச்சாளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக