ஞாயிறு, 30 ஜூன், 2013

THIRUMANTIRAM - 79 : சிவன் திருப்பெயரை எண்ணியிருந்தேன்.


79.                        சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்         
                             சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை;  
                             சேர்ந்திருந் தேன்சிவபோதியின் நீழலில்; 
                             சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 

     உமையொரு பாகராய் உள்ள இறைவனைச் சேர்ந்து வழிபட்டிருந்தேன். சிவபெருமான் சீவர்களைப் பக்குவம் செய்யும் வீணாத்தண்டின் முடிவிலே உள்ள சகசிரதளத்தில் சேர்ந்திருந்தேன். சிவம் என்ற அறிவின் நிழலில் சேர்ந்திருந்தேன். அப்போது சிவன் திருப்பெயர்களை எண்ணியிருந்தேன்.

     விளக்கம் : மங்கைபங்கன் - உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான். சிவபோதி - சிவ அறிவு. சிவன் கோவில் உள்ள அரசு. ஆவடுதுறை - திருவாவடுதுறை எனவும் கொள்ளலாம். சிவப்பெயர்கள் - நமச்சிவாய, சிவயநம, சிவயசிவ, சிவசிவ. முந்தையோர் மந்திர எழுத்துக்களை மாத்திரை கூட்டியும் குறைத்தும் கடைக்குறைத்தும் கையாண்டு வந்தனர். நிரதிசயம் - உயர்வற உயர்ந்த நன்மை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக