இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே;
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே;
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.
இந்த உடலில் எண்ணில்லாத காலம் தங்கியிருந்தேன். இரவும் பகலும் அற்ற சுயம்பிரகாச வெளியில் தங்கியிருந்தேன். தேவர்கள் எல்லாம் துதிக்கும் இடத்தில் இருந்தேன். என் குருநாதரான நந்தியின் திருவடியின் கீழ்ப் பொருந்தியிருந்தேன்.
விளக்கம் : காயம் - உடல். இராப்பகல் அற்ற இடம் - கதிரவன், திங்கள் கலைகளின் இயக்கம் இல்லாத இடம். கதிரவன் அறிவாகவும், சந்திரன் உணர்வாகவும் பொருள்படுகின்றது. இந்நிலை அறிவும் உணர்வும் தொழிற்படாத நிலை.
விளக்கம் : காயம் - உடல். இராப்பகல் அற்ற இடம் - கதிரவன், திங்கள் கலைகளின் இயக்கம் இல்லாத இடம். கதிரவன் அறிவாகவும், சந்திரன் உணர்வாகவும் பொருள்படுகின்றது. இந்நிலை அறிவும் உணர்வும் தொழிற்படாத நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக