ஞாயிறு, 11 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 47 நினையாதவர்க்கு இன்பம் இல்லை!


47.                        மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்;
                             நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்;
                             பனையுள் இருந்த பருந்தது போல   
                             நினையாத வர்க்குஇல்லை நின்இன்பம் தானே.

     சிவபெருமான்  உயிர்களின் உள்ளத்துள் கோயில் கொண்டிருக்கும் உண்மையை உணர்ந்து அதற்கு ஏற்ற வண்ணம் உடலை ஒம்புவர் பெருந்தவத்தர். அப்பெருமான் நெஞ்சத்து எழுந்தருளியிருக்கும் தன்மையை அறிந்தவர், சிவன் திருவடிக்கு அன்பு கொண்டு ஒழுகும் நேயத்தவர் ஆவர். அப்பெருமான் திருவருள் துணையால் நினையாதவர்க்கு எஞ்ஞான்றும் திருவடிப் பேரின்பம் உண்டாதல் இல்லை. அதற்கு உவமை பனை மரத்தின் மேல் இருக்கும் பருந்து அப்பனம் பழத்தின் இயல்பை அறியாததால் அதை உண்ணுவதற்கு நினையாமல் இழிந்த பொருளை உண்ண என்னியிருப்பதைப் போன்றதாகும்.



     விளக்கம் :  பனைமரத்தின் மேல் இருந்தாலும் பருந்து பணம் பழத்தை உண்ண நினைப்பதில்லை. அது போன்றது என உவமை கூறினார். உணவு வேண்டிய போது பனை மரத்தில் இருக்கும் பருந்து நிலத்துக்கு வந்து உணவை எடுத்துக் கொண்டு போய் விடும். அதைப் போல் இல்லறத்தார் விவகார வேளையில் உலகத்திலும் மற்ற நேரத்தில் சிவ சிந்தனையிலும் இருப்பின் இல்லற வாழ்வு அவரைப் பாதிக்காது என்பது கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக