வெள்ளி, 16 நவம்பர், 2012

ASTROLOGY - 26 : ஜோதிடம் - இராசிகள்.


கடக ராசி (கர்கடகம்)

     இராசி மண்டலத்தில் இது நான்காவது இராசியாகும். இது காண்பதற்கு நண்டுபோல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் 'கர்கடகம்' எனும் பெயரிட்டனர்.

     இது 90 பாகை முதல் 120 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 90 கலை 00 விகலை 01 முதல் பாகை 93 கலை 20 வரை புனர்பூசம்  நட்சத்திரமும்,   பாகை 93 கலை 20 விகலை 01 முதல் பாகை 106 கலை 40 வரை பூசம் நட்சத்திரமும், பாகை 106 கலை 40 விகலை 01 முதல் பாகை 120 வரை ஆயில்ய நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் சந்திரன் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை கடக அல்லது கர்கடக மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை ஆடி மாதம் என்பது வழக்கம். இம்மாதம் முதல் தட்சிணாயனம் ஆரம்பமாகும். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.




சோதிடவியலில் இராசி கடகத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  கடகம் 

இராசியின் உருவம்                          :  நண்டு  

இராசியின் நிறம்                               :  வெண்மை 

இராசியின் அங்கம்                           :  இதயம் 

இராசியின் வலிமை                         :  இரவில் 

இராசியின் பாலினம்                        :  பெண் 

இராசியின் தன்மை                          :  (1) செல்வது (சரம்) 
                                                              (2) இரட்டைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  சந்திரன் 

இராசியில் உச்சமான கோள்           :  குரு  

இராசியில் நீச்சமான கோள்            :  செவ்வாய்

இராசியில் நட்பான கோள்கள்        :     ------

இராசியில் பகையான கோள்கள்    :  சுக்கிரன், சனி, இராகு, கேது, புதன்     

இராசியில் சமமான கோள்கள்       :  சூரியன்   

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) புனர்பூசம் - 4 ஆம் பாதம்   
                                                              (2) பூசம் - 4 பாதங்கள் 
                                                              (3) ஆயில்யம் - பாதங்கள்  
  
இராசிக்குரிய தேசம்                        :  சோழ நாடு 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  CANCER - (கான்சர்)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 1/2

இராசியின் இராசிமானம்                 :  398 வினாடிகள்

இராசியின் காலம்                            :  இறந்த காலம்    

இராசியின் பார்வை                         :  இராக்குருடு 

இராசியின் இருப்பிடம்                    :  வெளியிடம்   

இராசியின் ஸ்தானம்                       :  வயல்   

இராசியின் திக்கு                              :  தெற்கு 

இராசியின் வேறு பெயர்                  :  1. மதி 2. நள்ளி 3. குளிர்  
                                                              4. கள்வன் 5. சேக்கை 6. அலவன் 
                                                              7. நண்டு 8. வண்டி 
  
இராசியின் குணம்                            :  சௌம்யம்  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக