சனி, 24 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 64 பயனற்றவை.


64.                        அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் 
                             எண்இலி கோடி தொகுத்திடும் ஆயினும் 
                             அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்  
                             எண்இலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

     சிவபெருமான் அருளால் வெளிப்பட்ட சிவாகமங்கள் எண்ணற்றவையாய்ச் சொல்லப்பட்டிருப்பினும் இறைவன் சொன்ன உண்மைப் பொருளை உணராவிடின் அவையெல்லாம் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்து விரைவாக அழிவது போல் பயனற்றவையாகிவிடும்.



     விளக்கம் :  அண்ணல் - பெருமையுடைய சிவபெருமான். ஆகமப் பொருளை இறைஞானம் கொண்டு உணர்தல் வேண்டும்.  
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக