செவ்வாய், 13 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 50 வழிபடுபவர் செய்ய வேண்டியது!


50.                        குடுவன்; நெஞ்சிடை வைப்பன்; பிரான் என்று 
                             பாடுவன்; பன்மலர் தூவிப் பணிந்து நின்று 
                             ஆடுவன்; ஆடி, அமரர் பிரான் என்று 
                             நாடுவன்; நான்இன்று அறிவது தானே.

     நான் இறைவனின் திருவடியை முடியில் சூடிக் கொள்வேன். நெஞ்சத்தில் கொண்டு போற்றுவேன். தலைவன் என்று பாடுவேன். பலமலர்களை அர்ச்சித்து அவனை வணங்கி நின்று கூத்தாடுவேன். அவ்வாறு ஆடி அவனே தேவதேவன் என்று விரும்புவேன். நான் இன்று அவனைப் பற்றி அறிந்து செய்வது இதுவாகும்.


     விளக்கம் :  இறைபணியில் ஈடுபடுபவர் ஆடுதல் முதலியவற்றைச் செய்ய வேண்டும். அறிவது - அறிந்து செய்வது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக