ஞாயிறு, 25 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 66 சிவனை ஆகம அறிவால் அறிய இயலாது.


66.                        அவிழ்க்கின்றவாறும், அதுகட்டு மாறும்  
                             சிமிட்டலைப் பட்டுஉயிர் போகின்ற வாறும்  
                             தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் இரண்டும் 
                             உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.


     உயிர்களைப் பந்தத்தினின்றும் நீக்கும் முறைமையையும் பந்தத்தில் விழும் முறையையும் கண இமைத்தல் ஒழித்து உயிர் போகின்ற முறையையும் தமிழ்மொழிச் சொல் வடமொழிச் சொல் என்னும் இரண்டாலும் உணர்த்தும் சிவனை உணர்தற்கு முடியுமோ! முடியாது.




     விளக்கம் : அவிழ்க்கின்றவாறு - உயிர்களைப் பந்தத்தினின்று விடுக்கும் விதம். அது கட்டுமாறு - பந்தத்தில் விழச் செய்தல். சிமிட்டலைப் படுதல் - கண இமைப்பு ஒலிதல். ஆமே - ஆகுமோ; ஆகாது என்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக