சனி, 3 நவம்பர், 2012

You want Still Young : இளமைக்கு மருந்து உணவு முறை!


     என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரின் ஆசையாகவும் இருக்கும். ஆனால், நவீன யுகத்தில் மாறி வரும் கலாச்சாரம், உணவுப் பழக்க வழக்கங்களால் சிறு வயதிலேயே நரை விழுவதும், வயதுக்கு மீறிய தோற்றம் ஏற்படுவதும் இயற்கையாகி விட்டது. நரையை மறைக்க, கறிவேப்பிலை உண்பதும், செம்பருத்தி இலை, பூக்களை காய வைத்து கலவை தயாரித்து தலையில் தேய்ப்பதும் வழக்கமாகி விட்டது.

     இப்போதெல்லாம் பேஷன் என்ற பெயரில், கலரிங் செய்யப்படுவதும் உண்டு. இயற்கை முறையை தவிர்த்து, செயற்கையை கையாண்டால், சில சமயங்களில் அலர்ஜியை ஏற்ப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதைத் தடுக்க தினமும் எளிய முறை உடற்பயிற்சி உட்பட பல்வேறு முறைகளால், நம்முடைய உடலை நாம் பாதுகாக்கலாம்.




     இது ஒருபுறம் இருக்க, உணவே மருந்து என்று காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தத்துவம் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. நாம் பயன்படுத்தும் உணவு முறைகளிலேயே இவற்றை சரி படுத்தலாம்.

இளமை நீடித்திருக்க வழி இருக்குங்க.

* கொஞ்சம் பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற வகைகளை சாப்பிட்டு பழகுங்கள். இது இருதய நோய் அபாயத்தை குறைக்கும். இருதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டு மொத்த நலனை காக்கும் செலினியம் ஆகியவை கொட்டை வகை உணவுகளின் மிகப்பெரிய சொத்து.


* இறைச்சியை உட்கொள்வதாக இருந்தால், மீன் உட்கொள்வதை வாடிக்கையாக்குங்கள். கொலஸ்ட்ராலை குறைத்து, இருத்த நோய் அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.



* பழ வகைகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் கேன்சர், இருதய நோய்களை தடுக்கும். நோய் தொற்றுக்கு எதிராக இருக்கும். காய்கறிகள், அதிகமான நார் சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன. 

* தினமும் 3 லிட்டர் நீர் அருந்த வேண்டும். ஏனெனில் தண்ணீர் குடிப்பது, உடலில் இருக்கும் பல நோய்களை வெளியேற்ற காரணமாக அமையும். தொடர்ந்து குளிர்பானங்கள் பருகுவது, தொப்பை வர முக்கிய காரணம்.


* காலை, மதியம், இரவு என, குறிப்பிட்ட நேரங்களில் உணவருந்த பழகுங்கள். தவறும் பட்சத்தில், வயிறு பதம் பார்க்க துவங்கி விடும். உணவை உண்ணும் போது, அவசரமாக உண்ண வேண்டாம். நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்போதுதான் எளிதில் ஜீரணம் ஆகும்.

* அனைத்து விதமான சத்துக்களை பெற, காய்கறிகளின் அளவுகளை அதிகப்படுத்த வேண்டும். 19 வகையான தாது உப்புக்கள், விட்டமின்கள் அவசியத் தேவை என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.


* தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும். சராசரியாக, பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

     பழரசங்களை விடுத்து, பழங்களை அப்படியே உட்கொண்டால், அதில் இருக்கும் சத்துக்கள் நேரடியாக உடம்பில் கலந்து விடும்.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக