வியாழன், 15 நவம்பர், 2012

ASTROLOGY - 25 : ஜோதிடம் - இராசிகள்.


மிதுன ராசி :

     இராசி மண்டலத்தில் இது மூன்றாவது இராசியாகும். இது காண்பதற்கு  ஆண், பெண் என இருவர் சேர்ந்து இருப்பது போல் காட்சியளிப்பதால் இதை இரட்டையர் எனும் பொருள் தரும்  'மிதுனம்' எனும் பெயர் பெற்றது. 

     இது 60 பாகை முதல் 90 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 60 கலை 00 விகலை 01 முதல் பாகை 66 விகலை 40 வரை மிருகசீரிட நட்சத்திரமும்,   பாகை 66 கலை 40 விகலை 01 முதல் பாகை 80 வரை திருவாதிரை  நட்சத்திரமும், பாகை 80 கலை 00 விகலை 01 முதல் பாகை 90 வரை புனர்பூச   நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் புதன் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை மிதுனமாஸம் என்பர். தமிழில் இம்மாதத்தை ஆனி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.



சோதிடவியலில் இராசி மிதுனத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  மிதுனம் 

இராசியின் உருவம்                          :  வீணையுடன் கூடிய பெண் மற்றும்                  
                                                               கதையுடன் கூடிய ஆண்  

இராசியின் நிறம்                               :  கருமை 

இராசியின் அங்கம்                           :  மார்பு 

இராசியின் வலிமை                         :  இரவில் 

இராசியின் பாலினம்                        :  ஆண் 

இராசியின் தன்மை                          :  (1) இரண்டும் (உபயம்) 
                                                              (2) ஒற்றைப்படை

இராசிக்குரிய கோள்                         :  புதன் 

இராசியில் உச்சமான கோள்           :  இல்லை (பரிவேடம்) 

இராசியில் நீச்சமான கோள்            :  இல்லை (இந்திர தனுசு) 

இராசியில் நட்பான கோள்கள்        :  சந்திரன், சுக்கிரன், சனி, இராகு, கேது 

இராசியில் பகையான கோள்கள்    :  செவ்வாய், குரு   

இராசியில் சமமான கோள்கள்       :  சூரியன்   

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) மிருகசீரிடம் - 3, 4 பாதங்கள்  
                                                              (2) திருவாதிரை - 4 பாதங்கள் 
                                                              (3) புனர்பூசம் - 1, 2, 3 பாதங்கள்  
  
இராசிக்குரிய தேசம்                        :  சேரநாடு 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  GEMINI - (ஜெமினி)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 1/4

இராசியின் இராசிமானம்                 :  317 வினாடிகள்

இராசியின் காலம்                            :  எதிர்காலம்    

இராசியின் பார்வை                         :  இராக்குருடு 

இராசியின் இருப்பிடம்                    :  இடை   

இராசியின் ஸ்தானம்                       :  சோலையும், நகரமும்  

இராசியின் திக்கு                              :  கிழக்கு

இராசியின் வேறு பெயர்                  :  1. சயமகள் 2. தண்டு 3. விழவு 
                                                              4. இரட்டை 5. பாடவன் 6. பாடவை 
                                                              7. யாழ் 8. வீணை
  
இராசியின் குணம்                            :  குரூரம்


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக