வெள்ளி, 23 நவம்பர், 2012

ASTROLOGY - 32 : ஜோதிடம் - இராசிகள்.


மகர ராசி 

     இராசி மண்டலத்தில் இது பத்தாவது இராசியாகும். இது காண்பதற்கு சுறா மீன் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் மகர ராசி எனும் பெயரிட்டனர்.

     இது 270 பாகை முதல் 300 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 270 கலை 00 விகலை 01 முதல் பாகை 280 கலை 00 வரை உத்திராடம் நட்சத்திரமும்,   பாகை 280 கலை 00 விகலை 01 முதல் பாகை 293 கலை 20 வரை திருவோணம் நட்சத்திரமும், பாகை 290 கலை 20 விகலை 01 முதல் பாகை 300 வரை அவிட்டம் நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் சனி ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை மகர மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை தை மாதம் என்பது வழக்கம். இம்மாதம் முதல் உத்தராயணம் ஆரம்பமாகிறது. இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.





சோதிடவியலில் இராசி மகரத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  மகரம் 

இராசியின் உருவம்                          :  சுறா மீன் 

இராசியின் நிறம்                               :  வெண்மை 

இராசியின் அங்கம்                           :  முழங்கால் 

இராசியின் வலிமை                         :  இரவில்   

இராசியின் பாலினம்                        :  பெண் 

இராசியின் தன்மை                          :  (1) செல்வது (சரம்) 
                                                              (2) இரட்டைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  சனி 

இராசியில் உச்சமான கோள்           :  செவ்வாய் 

இராசியில் நீச்சமான கோள்            :  குரு 

இராசியில் நட்பான கோள்கள்        :  சுக்கிரன், இராகு, கேது    

இராசியில் பகையான கோள்கள்    :  சூரியன் 

இராசியில் சமமான கோள்கள்       :  சந்திரன், புதன்     

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) உத்திராடம் - 1, 2, 3 பாதங்கள்  
                                                              (2) திருவோணம் - 4 பாதங்கள் 
                                                              (3) அவிட்டம் - 1, 2 பாதங்கள்     
  
இராசிக்குரிய தேசம்                        :  பாஞ்சாலம் 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  CAPRICORN - (காப்ரிகார்ன்)

இராசியின் (லக்ன) நாழிகை            :  5 1/4

இராசியின் இராசிமானம்                 :  317 வினாடிகள்

இராசியின் காலம்                            :  இறந்த காலம்    

இராசியின் பார்வை                         :  இராச்செவிடு  

இராசியின் இருப்பிடம்                    :  வெளியிடம்      

இராசியின் ஸ்தானம்                       :  சமுத்திரக்கரை 

இராசியின் திக்கு                              :  வடக்கு  

இராசியின் வேறு பெயர்                  :  1. கலை 2. சுறா 3. தை 4. மான்
                                
இராசியின் குணம்                            :  சௌம்யம்  

இராசியின் மூலத்திரிகோணம்       :  ---------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக