புதன், 14 நவம்பர், 2012

ASTROLOGY - 24 : ஜோதிடம் - இராசிகள்.


ரிஷப ராசி :

     இராசி மண்டலத்தில் இது இரண்டாவது இராசியாகும். இது காண்பதற்கு காளை போன்ற தோற்றமளிப்பதால் இது காளை என்னும் பொருள் தரும் 'ரிஷபம்' எனும் பெயர் பெற்றது. 

     இது 30 பாகை முதல் 60 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 30 கலை 00 விகலை 01 முதல் பாகை 40 வரை கார்த்திகை நட்சத்திரமும், பாகை 40 கலை 00 விகலை 01 முதல் பாகை 53 கலை 20 வரை ரோகிணி நட்சத்திரமும், பாகை 53 கலை 20 விகலை 01 முதல் பாகை 60 வரை மிருகசீரிட நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் சுக்கிரன் ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை ரிஷபமாஸம் என்பர். தமிழில் இம்மாதத்தை வைகாசி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.


சோதிடவியலில் இராசி ரிஷபத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  ரிஷபம் 

இராசியின் உருவம்                          :  எருது 

இராசியின் நிறம்                               :  வெண்மை  

இராசியின் அங்கம்                           :  முகம் 

இராசியின் வலிமை                         :  இரவில் 

இராசியின் பாலினம்                        :  பெண் 

இராசியின் தன்மை                          :  (1) நிலையானது (ஸ்திரம்) 
                                                              (2) இரட்டைப்படை

இராசிக்குரிய கோள்                         :  சுக்கிரன் 

இராசியில் உச்சமான கோள்           :  சந்திரன் 

இராசியில் நீச்சமான கோள்            :  இராகு, கேது 

இராசியில் நட்பான கோள்கள்        :  புதன், சனி 

இராசியில் பகையான கோள்கள்    :  சூரியன், குரு   

இராசியில் சமமான கோள்கள்       :  செவ்வாய்   

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) கார்த்திகை - 1, 2, 3 பாதங்கள்  
                                                              (2) ரோகிணி - 4 பாதங்கள் 
                                                              (3) மிருகசீரிடம் - 1, 2 பாதங்கள்  
  
இராசிக்குரிய தேசம்                        :  கர்நாடகம் 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  TAURUS - (டாரஸ்)

இராசியின் (லக்ன) நாழிகை            :  4 3/4

இராசியின் காலம்                            :  நிகழ்காலம் 

இராசியின் பார்வை                         :  பகல் குருடு 

இராசியின் இருப்பிடம்                    :  உள்ளிடம்  

இராசியின் ஸ்தானம்                       :  விளைச்சல் காடு 

இராசியின் திக்கு                              :  கிழக்கு

இராசியின் வேறு பெயர்                  :  1. மால் 2. விடை 3. பாறல் 4. புல்லம் 
                                                              5. நந்தி 6. மா  7. பசு 8. ஏறு 9. மாடு  
    
இராசியின் காலம்                            :       ----- 
  
இராசியின் குணம்                            :  சௌம்யம் 

செவ்வாயின் மூலத்திரிகோணம்   :  இருபத்தியேழாவது பாகையில்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக