செவ்வாய், 13 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 51 வேதத்தை ஓதி வீடு பெற்றனர்.


51.                        வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின் 
                             ஓதத் தகும்அறம் எல்லாம் உள; தர்க்க 
                             வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற 
                             வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

     வேதத்தில் கூறப்படாமல் விடுபட்ட அறம் ஏதும் இல்லை. நாம் ஓதத் தக்க நீதிகள் எல்லாம் வேதத்தில் உள்ளன. ஆதலால் அனுபூதி மான்கள் தம் வாதத்தை விட்டு எல்லாப் பொருளும் நிறைந்த வேதத்தை ஓதியே முத்தியை எய்தினார்கள்.




     விளக்கம் :  மதிஞர் - அறிஞர்; சமயவாதிகள். வேதம் நான்கு. அவை, இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். அவை ஒவ்வொன்றும் மந்திரம், பிராமணம், ஆரணியகம், உபநிடதம் ஆகிய நான்கு பகுப்புகளை உடையவை. அறம், பொருள், இன்பம், வீடு என்பவை அறம் எனப்பட்டன. 

1 கருத்து:

  1. கடவுள் இல்லை என்று நாய்களும் வஞ்சக நரிகளும் ஊளையிட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நல்ல பதிவிட்டுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு