சனி, 24 நவம்பர், 2012

ASTROLOGY - 34 : ஜோதிடம் - இராசிகள்.


மீன ராசி 

     இராசி மண்டலத்தில் இது பன்னிரெண்டாவது இராசியாகும். இது காண்பதற்கு இரு மீன்கள் ஒன்றின் வாலை மற்றொன்று பற்றிக்கொண்டு இருப்பது போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் மீன ராசி எனும் பெயரிட்டனர்.

     இது 330 பாகை முதல் 360 பாகை வரையில் காணப்படும். இதில் பாகை 330 கலை 00 விகலை 01 முதல் பாகை 333 கலை 20 வரை பூரட்டாதி நட்சத்திரமும்,   பாகை 333 கலை 20 விகலை 01 முதல் பாகை 346 கலை 40 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பாகை 346 கலை 40 விகலை 01 முதல் பாகை 360 வரை ரேவதி நட்சத்திரமும் காணப்படும். 

     இந்த இராசி வீட்டிற்குடைய கோள் குரு ஆகும். சூரியன் இந்த இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதத்தை மீன மாதம் என்பர். தமிழில் இம்மாதத்தை பங்குனி மாதம் என்பது வழக்கம். இந்த இராசியின் தன்மைகளைக் காண்போம்.






சோதிடவியலில் இராசி மீனத்தின் தன்மை.

இராசியின் பெயர்                              :  மீனம் 

இராசியின் உருவம்                          :  இரட்டை மீன்   

இராசியின் நிறம்                               :  பசுமை 

இராசியின் அங்கம்                           :  பாதம்   

இராசியின் வலிமை                         :  பகலில் 

இராசியின் பாலினம்                        :  பெண் 

இராசியின் தன்மை                          :  (1) இரண்டும் (உபயம்) 
                                                              (2) இரட்டைப்படை 

இராசிக்குரிய கோள்                         :  குரு 

இராசியில் உச்சமான கோள்           :  சுக்கிரன் 

இராசியில் நீச்சமான கோள்            :  புதன் 

இராசியில் நட்பான கோள்கள்        :  சூரியன், செவ்வாய், இராகு, கேது    

இராசியில் பகையான கோள்கள்    :  ----------

இராசியில் சமமான கோள்கள்       :  சந்திரன், சனி      

இராசியில் உள்ள நட்சத்திரங்கள்   :  (1) பூரட்டாதி - நான்காம் பாதம் 
                                                              (2) உத்திரட்டாதி - 4 பாதங்கள் 
                                                              (3) ரேவதி - 4 பாதங்கள்    
  
இராசிக்குரிய தேசம்                        :  கோசலம் 
  
இராசியின் ஆங்கிலப்பெயர்            :  PISCES - (பைஸஸ்)

இராசியின் (லக்ன) நாழிகை            :  4 1/4

இராசியின் இராசிமானம்                 :  259 வினாடிகள்

இராசியின் காலம்                            :  எதிர்காலம்    

இராசியின் பார்வை                         :  இரவில் முடம்   

இராசியின் இருப்பிடம்                    :  இடை   

இராசியின் ஸ்தானம்                       :  சமுத்திரம் 

இராசியின் திக்கு                              :  வடக்கு  

இராசியின் வேறு பெயர்                  :  1. சலசம் 2. சலசரம் 3. அயிரை 4. கயல் 
                                
இராசியின் குணம்                            :  சௌம்யம் 

இராசியின் மூலத்திரிகோணம்       :  --------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக