சனி, 3 நவம்பர், 2012

Women Accused in Salem Prison : அரை நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்ட பெண் கைதி!


      சேலம் பெண்கள் கிளை சிறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி 'ப்ளு பிலிம்' எடுப்பதாகக் கூறி, அரை நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்ட பெண் கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் மைதிலி(25). இவரது கணவர் சரவணன்.

     மைதிலி மீது அரூர், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் சிக்கிய மைதிலியை போலீசார் கைது செய்து, அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைதிலியை அவரது தாய் சாந்தி அடிக்கடி பார்த்து செல்வது வழக்கம்.

     சில வாரங்களுக்கு முன் சாந்தி பெண்கள் கிளை சிறைக்கு வந்து மகள் மைதிலியை சந்தித்தார். சிறைக்குள் பெரிய பொட்டலம் விழுந்தது. 'பாரா' சென்ற காவலர்கள் பொட்டலத்தை பிரித்து பார்த்து போது, அதில் ஹான்ஸ், பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகள் இருந்தன. கிளை சிறைக்கு வெளியே சுற்று சுவருக்கு பின்னால் இருந்து, சாந்தி போதை வஸ்து பொட்டலம் போட்டதை போலீசார் கண்டு பிடித்தனர். 

     சிறைக்குள் உள்ள மகள் மைதிலி மூலமாக போதை பொருட்களை விற்பனை செய்ய, சாந்தி சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்து பொட்டலம் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. சிறைக்குள் விதி முறை மீறி போதை வஸ்து பொட்டலம் வீசிய சாந்தியை போலீஸார் கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர்.


     வழக்கு சம்பந்தமாக மைதிலியை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நாமக்கல் போலீஸார் சேலம் பெண்கள் சிறைக்கு வந்தனர். சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட மைதிலி வேனில் ஏறாமல், சேலையை அவிழ்த்து வீசினார். அரைகுறை உடையுடன் கூச்சலிடத் துவங்கினார். போலீசார் மைதிலியின் அரை நிர்வாண கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

     சிறை காவலர்கள் மைதிலியை உள்ளே அழைத்து செல்ல அனுமதி மறுத்தனர். சிறையில் இருந்து கைதியை வெளியே அழைத்து சென்றால் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அழைத்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என தெரிவித்து விட்டு சிறை கதவை மூடி விட்டனர். இதனால் அரை நிர்வாண கோலத்துடன் மைதிலி ரோட்டில் நின்று கிளை சிறை அதிகாரிகள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தார். 

     சிறைக்குள் பெண் கைதிகளை சித்ரவதை செய்கின்றனர். பார்வையாளர்களிடம் லஞ்சமாக பணம் வாங்குகின்றனர். கேள்வி கேட்கும் கைதிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைதிலி சிறை முன்பு நின்று கூச்சலிட்டபடி இருந்தார்.

     பெண் கைதி மேலாடை இல்லாமல் ரோட்டில் நின்று பேராட்டத்தில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் கூட்டம் கூடியது. என் மீதும், என் தாய் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆடையை களைந்து போட்டோ, வீடியோ எடுத்து சிறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். ஏன் என்று கேட்டால் 'ப்ளூ பிலிம்' எடுத்து வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். 

     கைதிகளை பார்க்க வருபவர்களிடம் 300, 400 ரூபாய் லஞ்சமாக பணம் கேட்கின்றனர். நாங்களே சிறைக்குள் அடைபட்டு கிடக்கிறோம். எப்படி சிறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுக்க முடியும்? சித்ரவதை செய்யும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

     அஸ்தம்பட்டி போலீசார் சிறை அதிகாரிகளிடம் பேசி, அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி மைதிலியை சிறைக்குள் அழைத்து சென்றனர்.

நன்றி : தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக