சென்னை: ஜெயம் ரவியுடன் த்ரிஷா நடிக்க மறுத்தாரா என்பதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். ஜெயம் ரவி நடிக்கும் படம் 'பூலோகம். இதில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. இது பற்றி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் கூறியதாவது : இரண்டு குத்து சண்டை அணிகளுக்கு இடையே நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டு மருந்து வாத்தியார் பரம்பரையை சேர்ந்தவராக ஜெயம் ரவி நடிக்கிறார். படத்தில் அவர் குத்து சண்டை வீரர். பூலோகம் என்ற பெயரில் நடிக்கிறார். ஜோடி த்ரிஷா. பிரகாஷ்ராஜ், சண்முகராஜன், பாலாசிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்காக மதன் என்ற மாஸ்டரிடம் குத்து சண்டையை முறைப்படி கற்றுக்கொண்டார் ரவி.
நிஜ குத்து சண்டை வீரர்களும் படத்தில் நடிக்கின்றனர். ஹாலிவுட்டை சேர்ந்த குத்து சண்டை நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார். ஒளிப்பதிவு சதீஷ்குமார். இசை ஸ்ரீகாந்த் தேவா. வசனம் ஜனநாதன். தயாரிப்பு ஆஸ்கார் ரவிச்சந்திரன். இப்படத்தில் த்ரிஷா நடிக்க மறுத்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது பற்றி கேட்கிறார்கள்.
இப்படத்தின் ஸ்கிரிப்டை சொன்னவுடன் த்ரிஷா நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கான கால்ஷீட்டும் ஒதுக்கி தந்து ஷூட்டிங்கிற்கு முழு ஒத்துழைப்பு தருகிறார். ஆனாலும் அவர் நடிக்க மறுத்ததாக அடிக்கடி வதந்திகள் வருவது எப்படி என்று தெரியவில்லை. வதந்தி கிளப்புபவர்கள் பற்றி கவலைப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக