சனி, 28 ஜூலை, 2012

புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்பவரா?


     இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள்  பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். 

     அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். 

     நேரடியாக இன்டர் நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் பெரும்பாடு படவேண்டும். வேர்த்து வியர்த்து போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக