இஸ்லாம் - வெண்ணிற ஆடையே சிறந்தது -
நபிகளாரின் பொன்மொழிகள்
* ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான்.
என்னைத் துன்புறுத்தியவன் இறைவனைத் துன்புறுத்தியவனாவான்.
அந்நிய மதத்தினரை துன்புறுத்தியவன் என்னை (முஹம்மதை)
துன்புறுத்தியவனாவான்.
* திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச்
சார்ந்தவன் இல்லை.
* பெற்றோரைக் கொடுமைப்படுத்தியவர் எதுநாள் வரை என்னிடம் மன்னிப்பு
கேட்கவில்லையோ, அதுநாள் வரை அவர் பாவிகளின் கூட்டத்திலேயே
சேர்ந்திருப்பார்.
* வெண்மையான ஆடைகளை அணியுங்கள். வெண்மையான ஆடை
சிறந்ததாகும். அதனை மரணித்தவர்களுக்கு கபன் ஆடையாக
அணிவியுங்கள்.
* சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோர்களாகும். அவர்களுக்கு
நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து
விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.
* ஒருவன் தன் தந்தை மரணித்தபின் அவருடைய நண்பர்களுடன்
உறவுகொள்வதே சிறந்த செயலாகும்.
* உங்கள் குழந்தைகளை முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும்
சொர்க்கத்தில் பதவி உண்டு.
* உங்கள் குழந்தைகளை சங்கைப்படுத்துங்கள். குழந்தைகளைச்
சங்கைப்படுத்துவது ஒரு வணக்கம்.
* ஒருவன் தனது பிள்ளைகளுக்கு தனது சொத்தில் அவர்களுக்குரிய
பங்கைக் கொடுக்கவில்லையானால், அவர்களை பெரும் நஷ்டத்திற்கு
ஆளாகி விடக்கூடிய நிலையில் ஆக்கினால் தீர்ப்புநாளில் அல்லாஹ்
சுவர்க்கத்தில் அவருக்குரிய பங்கை நஷ்டப்படுத்தி விடுவான்.
* வயது வந்த பெற்றோர்களில் (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து
அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால் அவர்கள்
சொர்க்கம் நுழைய முடியாது.
* பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து
உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப் படுத்துவனாக.
நன்றி : தினமலர்
நல்ல பதிவு!
பதிலளிநீக்குமேல் குறிப்பிட்டுள்ள நபிகளாரின் பொன்மொழிகள் எந்த ஹதீஸ் புத்தகத்தில், எந்த நபித்தோழர் அறிவித்துள்ளார் என்பதினை அன்புடன் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்!