அமெரிக்க கல்லூரி மாணவிகள் ஹுக்கா புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல நாடுகளில் பெண்கள் சிகரெட் புகைப்பது அதிகரித்து விட்டது. ஆனால், அமெரிக்க கல்லூரி மாணவிகளிடம் சிகரெட்டை விட ஹுக்கா புகைப்பது பாதுகாப்பானது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மிரியம் மருத்துவமனையில் உள்ள நடத்தை மற்றும் தடுப்பு மருந்து துறையினர் சமீபத்தில் கல்லூரி மாணவிகளிடம் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது : கல்லூரி மாணவிகளிடம் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல் ஹுக்கா புகைக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது.
நான்கில் ஒரு மாணவி, சிகரெட்டை விட ஹுக்கா பாதுகாப்பானது என்று நம்புகிறார். பெரும்பாலும் கல்லூரியில் முதலாண்டு படிக்கும் மாணவிகளிடம்தான் இந்த எண்ணம் அதிகரித்துள்ளது.
ஆனால், சிகரெட்டுக்கும் ஹுக்காவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சிகரெட்டால் ஏற்படும் புற்றுநோய், சுவாச கோளாறு போன்ற எல்லா நோய்களும் ஹுக்கா புகைப்பதாலும் வரும். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக