செவ்வாய், 10 ஜூலை, 2012

இரண்டு ஹீரோயின் பிரச்னையில்லை! எனது கேரக்டர் தான் முக்கியம் : பார்வதி ஓமனக்குட்டன்!


     அஜித் நடிப்பில் உருவாகியுள்ள பில்லா-2 படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் பார்வதி ஓமனக்குட்டன். இப்படம் ஜூலை 13ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது.

     இந்நிலையில் பார்வதி ஓமனக்குட்டன் தினமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது, அஜித் படத்தில் அறிமுகம் ஆக நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கிறேன். படத்தில் நான் ஜாஸ்மின் என்ற ரோலில் நடிக்கிறேன். படத்தில் என்னுடன் புரூனா அப்துல்லாவும் நடிக்கிறார். 

     படத்தில் இரண்டு ஹீரோயின் இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. ப‌டத்தில் எனக்கு வரும் காட்சிகள் எவ்வளவு, என்னுடன் எத்தனை ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்பட்டதே கிடையாது. எனக்கு எப்படிப்பட்ட ரோல், அதை மட்டும் தான் பார்ப்பேன் என்றார். 

     அஜித் சமைத்து கொடுத்த ப்ரியாணி என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் காதல் அனுபவம் குறித்து அவர் கூறுகையில் காதல் என்பது எல்லோருக்கும் ஒருவிதமான பீல். அது எல்லோருக்கும் வரும் என்று கூறியுள்ளார்.

நன்றி : தினமலர்
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக