திங்கள், 23 ஜூலை, 2012

செக்ஸ் பொம்மையால் சீன போலீசார் அதிர்ச்சி!


     ஆற்றில் மிதந்து வந்த பெண் உடலை பார்த்து சீன போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அதை மீட்ட போது செக்ஸ் பொம்மை என்று தெரிந்தது.

     சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள வென்டெங் என்ற இடத்தில் பாலத்தின் அடியில் ஆற்றில் பெண் உடல் ஒன்று மிதந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து 18 போலீசார் அங்கு விரைந்து வந்தனர். 

     அதற்குள் ஏராளமான மக்கள் பாலத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிவி கேமராமேன்களும் அங்கு குவிந்தனர். ஆற்றில் மிதந்து வந்த பெண் பற்றி யூகங்கள் அடிப்படையில் டிவி நிருபர் கேமராவில் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார். 

     ஆற்றில் மிதந்த பெண் உடலை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மீட்டனர். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அது பெண் உடல் அல்ல. செக்ஸ் பொம்மை. யாரோ ஆற்றில் வீசியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆற்றில் மிதந்து வந்த பொம்மை, பார்ப்பதற்கு அசல் பெண் உடல் போலவே இருக்கிறது. அதனால் குழப்பம் ஏற்பட்டு விட்டது என்றனர்.

     சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில்தான் செக்ஸ் பொம்மைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தவறாக செய்தி ஒளிபரப்பிய சீன டிவி நேயர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

நன்றி : தமிழ் முரசு
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக