சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை ஆண், பெண் வித்தியாசம் இன்றி பேஸ்புக், டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதில் பல மோசடிகள் நடந்து வருவதாக தினமும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகைகளின் பெயரிலேயே அதிகளவு மோசடிகள் நடக்கின்றன. நடிகைகளின் படங்கள் மற்றும் செய்திகளை அவற்றில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஏற்கனவே நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா போன்றோர் பெயர்களில் இதுபோல மோசடிகள் நடந்துள்ளதாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் தமன்னா. இவரது பெயரிலும் பேஸ்புக், டுவிட்டரில் மோசடி நடக்கிறது. அவர் நடிக்கும் பட விவரங்கள், படப்பிடிப்பு நிகழ்ச்சி நிரல்கள், ஸ்டில்கள் போன்றவை அவற்றில் போடப்பட்டு உள்ளன. அது தமன்னாவின் பேஸ்புக் என ரசிகர்கள் ஏமாந்து தொடர்பு வைத்துள்ளனர். இது பற்றி அறிந்த தமன்னா அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பேஸ்புக், டுவிட்டரில் நான் இல்லை. என் பெயரில் மோசடி நடக்கிறது. ரசிகர்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக