செவ்வாய், 10 ஜூலை, 2012

துபாய் பட விழாவில் கவர்ச்சி ஆட்டம் போட்ட அமலாபால்!



     சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். மைனாவில் கிராமத்து வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். 

     தொடர்ந்து அவர் நடித்த படங்களில் கவர்ச்சி காட்டினாலும், முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்தது இல்லை. ஆனால் முதன்முறையாக சினிமா விழாவில் படு கவர்ச்சியாக அமலாபால் நடனமாடி உள்ளார். 

     சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சினிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போதுதான் அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். 

     தெலுங்கு திரையுலகில் வாய்ப்பைப் பிடிக்கும் நோக்கத்தில்தான் இப்படி கவர்ச்சி ஆட்டம் போட்டு தெலுங்கு திரையுலகினரை கவர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தெலுங்கில் கவர்ச்சிக்கு தனி கட்டிங் என்பதால் இந்த கவர்ச்சி ஆட்டமாம்.

1 கருத்து: