அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்று தொடங்க நித்தியானந்தா அறக்கட்டளை பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடு செய்திருப்பதாக அமெரிக்க நீதிமன்றம் உறுதியாக கூறியுள்ளது. பொபத்லால் சாவ்லா என்பவர் நித்தியானந்தாவுக்கெதிராக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனது மனுவில், அமெரிக்காவில் வேதிக் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க நித்தியானந்தா அறக்கட்டளைக்கு 1.57 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்ததாகவும், ஆனால் உறுதி அளித்தபடி பல்கலைக்கழகம் தொடங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் நித்தியானந்தா அறக்கட்டளை இந்த விவகாரத்தில் குற்றம்புரிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.
நன்கொடையாக அளிக்கப்பட்ட 1.57 மில்லியன் டாலர்களை பொபத்லால் சாவ்லாவுக்கு திருப்பி அளிக்குமாறு நித்தியானந்தா அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் தண்டனை விவரத்தை ஜூலை 19-ம் தேதி அறிவிக்க உள்ளது.
Courtesy : NewIndiaNews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக