புதன், 25 ஜூலை, 2012

படவிழாவில் நடிகை சாரா மீது கல்வீச்சு : உதடு கிழிந்தது


     முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான சாரா ஜேன் தியாஸ் பரிதாபாத்தில் நடந்த படவிழாவின்போது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்கினார். இதில் அவரது உதடு கிழிந்தது.

     ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஏக்தா கபூர் தயாரித்துள்ள ‘கியா சூப்பர் கூல் ஹைய் ஹம்’ என்ற இந்திப்படத்தில் சாரா காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ் தேஷ்முக், துஷார் கபூர் மற்றும் நேகா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். 

      இப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் அறிமுக விழா அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்றது. அப்போது சாரா, சக நடிகைகளுடன் விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூட்டத்திலிருந்து கல் வீசினார். இது சாராவின் உதட்டில் பட்டு உதடு கிழிந்தது. 

     இத்தகவலை டுவிட்டர் தளத்தில் வேதனையுடன கூறியுள்ளார் சாரா. ‘என் வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த இந்த சம்பவத்தால் நான் மிகவும் அவமானமடைந்தேன். எனது முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியாக இருக்கலாம்’ என்று சாரா தெரிவித்துள்ளார். 

     இச்சம்பவத்தையடுத்து சாரா அன்று முழுவதும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்றும், மாலையில் தனது ரசிகர்களை சந்தித்தார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக