குரு :
இக்கோள் சூரியனுக்கு ஐந்தாவது வட்டத்தில் உள்ளது. சூரியனுக்கு சுமார் 48,00,00,030 மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு பன்னிரெண்டு ஆண்டுகளில் சூரியனைச் சுற்றி வருகிறது. இது தன்னைத் தானே சுற்றி வர 9 மணி 55 நிமிடங்களாகும். இதன் குறுக்களவு சுமார் 56,500 மைல்களாகும்.
குருவுக்கு வழங்கும் பிற பெயர்கள் :
வியாழன்,அந்தணன்,அரசன்,ஆசான்,சிகண்டி,சீவன்,சுரகுரு,தாராபதி,
தெய்வமந்திரி, பிருஹஸ்பதி,மறையோன்.
தெய்வமந்திரி, பிருஹஸ்பதி,மறையோன்.
ஜோதிடவியலில் கோள் குருவின் தன்மை
1. நிறம் - மஞ்சள்
2. குணம் - சத்வம் - சௌம்யன்
3. மலர் - முல்லை
4. இரத்தினம் - புஷ்பராகம்
5. சமித்து - அரசு
6. தேசம் - * சிந்துதேசம்
7. தேவதை - நான்முகன், இந்திரன்
8. பிரத்யதிதேவதை - நான்முகன்
9. திக்கு - வடக்கு
10. ஆசனவடிவம் - செவ்வகம்
11. வாகனம் - யானை
12. தானியம் - கொத்துக்கடலை
13. உலோகம் - பொன்
14. பிணி - வாதம் (வாய்வு)
15. சுவை - இனிப்பு
16. நட்புக்கோள்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
17. பகைக்கோள்கள் - புதன், சுக்கிரன்
18. சமமான கோள்கள் - சனி, இராகு, கேது
19. கோளின காரகம் - தனம், சந்தானவிருத்தி
20. கோளின ஆட்சி வீடு - தனுசு, மீனம்
21. கோளின மூலத்திரிகோண வீடு - தனுசு
22. கோளின உச்ச வீடு - கடகம்
23. கோளின நீச வீடு - மகரம்
24. கோளின உறுப்பு - வயிறு
25. கோளின நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
26. கோளின தசை ஆண்டுகள் - பதினாறு ஆண்டுகள்
26. கோளின தசை ஆண்டுகள் - பதினாறு ஆண்டுகள்
27. கோளின பாலினம் - ஆண்
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - ஒரு வருட காலம்
29. கோளின உருவம் - உயரம்
30. கோளின உபக்கிரகம் - யமகண்டன்
31. சேத்திரம் - திருச்செந்தூர், ஆலங்குடி
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
சுக்கிரன் :
அசுரமந்திரி, உசனன், வெள்ளி, கவி, சுங்கன், பார்க்கவன், பிருகு, மழைக்கோள்,காப்பியன்,சல்லியன்.
சுக்கிரன் :
இக்கோள் சூரியனுக்கு இரண்டாவது வட்டத்தில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு சுமார் 6,70,00,000 மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு 225 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது. இது தன்னைத் தானே 23 ½ மணி நேரத்தில் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 23,200 மைல்களாகும். இதன் குறுக்களவு சுமார் 7,700 மைல்களாகும்.
சுக்கிரனுக்கு வழங்கும் பிற பெயர்கள் :
அசுரமந்திரி, உசனன், வெள்ளி, கவி, சுங்கன், பார்க்கவன், பிருகு, மழைக்கோள்,காப்பியன்,சல்லியன்.
ஜோதிடவியலில் கோள் சுக்கிரனின் தன்மை
1. நிறம் - வெண்மை
2. குணம் - ராஜஸம் - சௌம்யன்
3. மலர் - வெண்தாமரை
4. இரத்தினம் - வைரம்
5. சமித்து - அத்தி
6. தேசம் - * காம்போஜதேசம்
7. தேவதை - லக்ஷ்மி, * இந்திராணி
8. பிரத்யதிதேவதை - இந்திரன்
9. திக்கு - கிழக்கு
10. ஆசனவடிவம் - ஐங்கோணம்
11. வாகனம் - கருடன்
12. தானியம் - மொச்சை
13. உலோகம் - வெள்ளி
14. பிணி - சீதளம்
15. சுவை - இனிப்பு
16. நட்புக்கோள்கள் - புதன், சனி, இராகு, கேது
17. பகைக்கோள்கள் - சூரியன், சந்திரன்
18. சமமான கோள்கள் - செவ்வாய், குரு
19. கோளின காரகம் - களத்திரம், * பகலில் தாய்
20. கோளின ஆட்சி வீடு - ரிஷபம், துலாம்
21. கோளின மூலத்திரிகோண வீடு - துலாம்
22. கோளின உச்ச வீடு - மீனம்
23. கோளின நீச வீடு - கன்னி
24. கோளின உறுப்பு - முகம்
25. கோளின நட்சத்திரங்கள் - பரணி, பூரம், பூராடம்
26. கோளின தசை ஆண்டுகள் - இருபது ஆண்டுகள்
26. கோளின தசை ஆண்டுகள் - இருபது ஆண்டுகள்
27. கோளின பாலினம் - பெண்
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம்
29. கோளின உருவம் - நடுத்தரம்
30. கோளின உபக்கிரகம் - இந்திரதனுஷ்
31. சேத்திரம் - ஸ்ரீரங்கம்
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
சனி :
அந்தகன்,கரியவன், காரி,சௌரி,நீலன்,மந்தன்,முடவன்,முதுமகன்.
சனி :
இக்கோள் சூரியனுக்கு ஆறாவது வட்டத்தில் உள்ளது. சூரியனுக்கு சுமார் 88,60,00,000 மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு 29½ வருடத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. இது தன்னைத் தானே 10 மணி 14 நிமிடம் 24 வினாடிகளில் சுற்றி வருகிறது. இதன் குறுக்களவு சுமார் 75,000 மைல்களாகும்.
சனிக்கு வழங்கும் பிற பெயர்கள் :
அந்தகன்,கரியவன், காரி,சௌரி,நீலன்,மந்தன்,முடவன்,முதுமகன்.
ஜோதிடவியலில் கோள் சனியின் தன்மை
1. நிறம் - கருப்பு
2. குணம் - குரூரன்
3. மலர் - கருங்குவளை
4. இரத்தினம் - நீலக்கல்
5. சமித்து - வன்னி
6. தேசம் - சௌராஷ்ட்ரம்
7. தேவதை - யமன்
8. பிரத்யதிதேவதை - பிரஜாபதி
9. திக்கு - மேற்கு
10. ஆசனவடிவம் - வில்வடிவம்
11. வாகனம் - காகம்
12. தானியம் - எள்
13. உலோகம் - இரும்பு
14. பிணி - வாதம் - (வாய்வு)
15. சுவை - கைப்பு
16. நட்புக்கோள்கள் - புதன், சுக்கிரன், இராகு, கேது
17. பகைக்கோள்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
18. சமமான கோள்கள் - குரு
19. கோளின காரகம் - ஆயுள், * இரவில் தந்தை
20. கோளின ஆட்சி வீடு - மகரம், கும்பம்
21. கோளின மூலத்திரிகோண வீடு - கும்பம்
22. கோளின உச்ச வீடு - துலாம்
23. கோளின நீச வீடு - மேஷம்
24. கோளின உறுப்பு - தொடை
25. கோளின நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
26. கோளின தசை ஆண்டுகள் - பத்தொன்பது ஆண்டுகள்
26. கோளின தசை ஆண்டுகள் - பத்தொன்பது ஆண்டுகள்
27. கோளின பாலினம் - அலி
28. கோள் இராசியில்
சஞ்சரிக்கும் காலம் - இரண்டரை ஆண்டுகள்
29. கோளின உருவம் - குள்ளம்
30. கோளின உபக்கிரகம் - குளிகன்
31. சேத்திரம் - திருநள்ளாறு
( * குறியிட்டுள்ளது சாதக அலங்காரப்படி)
( # குறியிட்டுள்ளது பெரிய வருஷாதி நூல்படி)
மற்ற கோள்களைப் பற்றி நாளை பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக