ஞாயிறு, 22 ஜூலை, 2012

குழந்தைகள் என்றால் எனக்கு மட்டுமல்ல என் கேமிராவிற்கும் பிரியம் அதிகம் - ராமலட்சுமி


     திருநெல்வேலியில் பிறந்தவர். பெங்களூரில் வசித்து வருபவர். 17 வயதில் ஆர்வ மிகுதியால் வீட்டிலிருந்த கேமிராவில் படமெடுக்கப் பழகியவர். மெதுவாக ஆனால் படிப்படியாக போட்டோகிராபி பற்றி நிறைய தெரிந்து கொண்டிருப்பவர்.

     நீண்ட வருட புகைப்பட பயணத்தில் இவரது கேமிரா நாடு முழுவதும் மட்டுமின்றி, நாட்டைதாண்டி சிங்கப்பூர் போன்ற கீழ்திசை நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு விட்டது.

     முழுக்க, முழுக்க பொழுது போக்கிற்காக மட்டும் படமெடுக்கும் இவருக்கு குழந்தைகள், கோபுரங்கள், சிற்பங்கள், பறவைகள் மற்றும் இயற்கை காட்சிகளை படம் எடுப்பது என்றால் மிகவும் பிரியம். 

     இவர் கேரளா மாநிலம் குமரகம் போன போது எடுத்த படம்தான் "மேக் மை ட்ரிப் காம்' விளம்பர படமாக வந்துகொண்டு இருக்கிறது. தன்னைப் போல ஆர்வமாக உள்ளவர்கள் புகைப்படம் பற்றி தெரிந்து கொள்வதற்காக வலைத்தளத்தில் நிறைய எழுதிவருபவர். 

     தொன்மையான கட்டிடங்களை படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்பது இவரது லட்சியம். இவரது லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக